நீங்க எவ்வளவு நேரம் தூங்குவிங்க ? நாம சொல்ற பதிலை வச்சே நம்மை சில பேர் கணிச்சிருவாங்க. சோம்பேறி, தூங்குமூச்சி, அதுக்கும் மேல உருப்படாதவன். சொல்றவங்க என்னத்த உருப்பட்டாங்கன்னு தெரியலை. கேட்டாலும் சொல்ல மாட்டாங்க. அது வேற கதை.
சரி நம்ப கதைக்கு வருவோம். மனிதனோட சராசரி தூக்கம் ஆறு மணிநேரம்னு யாரு சொல்லியிருப்பா ? எதுக்காக எல்லோரும் அதையே கடைபிடிக்கறாங்கன்னு எனக்கும் தெரியலை. அந்த ஆறு மணிநேர தூக்கத்தையும் தாண்டியும் உங்களைத் தூங்க சொன்னா சுமாரா எத்தனை மணி நேரம் தூங்குவிங்க சொல்லுங்க.
ஒரு மணிநேரம். ரெண்டு மணிநேரம் . என்னங்க , அவ்வளவு நேரம்தானா. நான் எவ்வளவு நேரம் தூங்குவேன்னு தெரியுமா? ஒரு நாள் முழுவதும். வெளிய இருந்துப் பார்க்கத்தான் இது தூக்கம். ஆனா தூங்கற எனக்கு இது ஒருவகை பயணம். டிக்கட் செலவில்லை, லக்கேஜ் அளக்கவில்லை துணையாகத் தொல்லை யாரும் இல்லை. தனியான பயணம் ஆனால் சுவையான பயணம். இந்த பயணத்தை நீங்க புரிஞ்சிக்கனும்னா, ஒரு வழி இருக்கு.
ரொம்ப சாதாரணமான கேள்விகளை நான் கேட்கறேன் பதில் சொல்றிங்களா...? பதிலை மனதில் நினைச்சிக்கோங்க. அது கூட போதுமானதுதான். நமக்கு தேவை நினைப்பு.
கேள்வி 1.
ரஜினியுடன் கோச்சடையானின் நடிக்க ஆசையா..?
கேள்வி 2.
50 கிலோ நமிதாவுடன் நடனம் ஆட ஆசையா..?
கேள்வி 3.
நினைத்த பெண்களின் ஒரே நாயகனாக ஆசையா..?
கேள்வி 4.
காணாமல் போன நயன்தாராவை தேடிக் கிடைக்க ஆசையா..?
கேள்வி 5.
தமிழர்களெல்லாம் தமிழ் பேசிக் கேட்க ஆசையா..?
கேள்வி 6.
எழுத்தாளர் சங்கத்துல இருக்கறவங்க எல்லோரும் வாசிக்கனும் யோசிக்கனும் விவாதிக்கனும் எழுதனும்னு ஆசையா...?
கேள்வி 7.
ஒரு பத்திரிகையும் இன்னொரு பத்திரிக்கையும் மக்களுக்காக மட்டுமே பாடுபடனும்னு ஆசையா...?
கேள்வி 8.
கதையை கதையா மட்டும் பார்க்கற பயபுள்ளைங்க பக்கத்துல இருக்கனும்னு ஆசையா..?
எட்டு கேள்விகளோடு நிறுத்திக் கொள்கிறேன். இரண்டு காரணம் இதற்கு உண்டு;
ஒன்று; எனக்கு எட்டு எண் ராசி.
மற்றொன்று; அதுதான் ஏழரையைத் தாண்டி வந்திருக்கு.
தூக்கம் வெறும் உடல் சோர்வுக்கு மட்டுமில்லைங்க. அதையும் தாண்டிய சூட்சுமம் நிறைந்தது. சூட்சுமம்னு நான் சொன்னதும், இது ஏதோ மர்மக்கதை ஆவிக்கதைன்னு படிக்க ஆரம்பிச்சிடாதிங்க. அப்பறம் தேவையில்லாம என்னை திட்டுவிங்க. அப்படியே போகிற போக்குல படிச்சோமா போனோமான்னு இருங்க. அதான் உங்களுக்கும் நல்லது எனக்கும் நல்லது. இல்லைன்னா மேல கேட்ட கேள்விகளுக்கேகூட நீங்க என்னை கடுமையான முறையில் விமர்சிப்பிங்க.
ஒன்னு கவனிச்சிருக்கிங்களா, கருத்தை கவனிக்காம அதை சொன்னப் பாவத்துக்காக பாடாய் படுத்தப்பட்டவங்க நம்மவங்கத்தான். படுத்தறவங்களும் நம்மவங்கத்தான். ஊர்ல உலகத்துல நடக்கறத சொல்லைங்க, எனக்கு தெரிஞ்ச கொஞ்சூண்டு இலக்கியத்துல சொல்றேன். கோவிச்சிக்காதிங்க.
தூங்கி எழுந்திருக்கும் நேரத்துக்கு முந்தைய பதினைஞ்சு முதல் முப்பது நிமிடங்களுக்கு, ஆல்பா நிலைன்னு பேரு, தெரியுமா. ஆல்பா நிலை தியானம்னு கூட இதை சொல்றாங்க. இந்த நேரத்துலதான், நம்முடைய மனம் ரொம்ப இலகுவா இருக்குமாம். இலகுன்னா என்னன்னு கேட்கறிங்களா..?
தனக்கு ஓட்டு போடுவாங்கன்னு தெரிஞ்ச நண்பர்களை , அவங்க தகுதியானவங்களோ இல்லையோ அதெல்லாம் கணக்கில் சேராது. அவங்களை சங்கத்துல சேர்த்துக்கிட்டு வருசா வருசம் தேர்தல் நடத்தற தலைவரா இருக்கறதே கூட இலகுவான காரியம்தான். என்ன ஒன்னு, இந்த பிம்பமெல்லாம் கொஞ்சம் நாள் கம்பத்துல ஏறிடும்.
இதை படிச்சிட்டு நேரா, அவர்கிட்ட சொல்லிடாதிங்க. ஏற்கனவே எனக்கும் அவிங்களுக்கும் வாய்க்கா தகராறு இருக்கு. என்ன தகராறு....? சரியா சொன்னிங்க ‘எனக்கும் அவிங்களுக்கும் வாய்க்கா தகராறு இருக்கு’. ஆனா ஒன்னு அதே வழிமுறைய நீங்க திறம்பட கத்துக்கிட்டிங்கன்னா, வருசத்துக்கு என்ன மாசத்துக்கு ஒரு தடவைகூட தேர்தல் வைக்கலாமே. நீங்கதானே எப்படியும் தலைவரா வருவிங்க, அப்புறம் என்ன கவலை.
நான் பாருங்க, ஆல்பா-வை விட்டுட்டு அந்த பக்கம் போய்ட்டேன். அந்த பக்கம்னு நான் சொல்றதை அவர் பக்கம்னு புரிஞ்சிக்காதிங்க. அந்த பக்கம் அவ்வளோதான்.
அந்த ஆல்பா நிலையில நாம தூங்கியும் தூங்காமலும், எழுந்தும் எழாமலும் இருப்போம். இலகுவா இருக்கற மனசுகிட்ட நீங்க எதை தொடர்ச்சியா சொல்றிங்களோ அதையே மனசு கப்புன்னு புடிச்சிக்குமாம். எப்படி.... தொடர்ந்து தலைவரா இருக்கற மாதிரியான்னு கேட்டு என்னை சிக்கலில் மாட்டிவிட்டுடாதிங்க. அது இலகு என்பதற்கு இலகுவா நான் சொன்ன உதாரணம்.
தொடர்ந்து ஆல்பா நிலையில மனதிடம் பேச பழகிட்டா, மனம் நம் வசமாகிடுமாம். இதில் என்ன ஒரு கஷ்டம்ன்னா, நமக்கு அந்த நேரத்துலதான் கனவு மேல கனவா வரும். அந்த கனவுகளுக்கு காரணம் இருக்கு, அவை வெறும் கனவுகள் அல்ல. மாறாக அவை எல்லாம் நம் ஆழ்மனதின் செயல்பாடு.
அந்த கனவு எப்படிப்பட்டது தெரியுமா..? அதற்கான பதில்களை பார்ப்போம்.
பதில் 1.
ரஜினியுடன் கோச்சடையானில், அவருக்கு இணையான வில்லனாக நடித்துக் கொண்டிருப்பீர்கள்.
பதில் 2.
50 கிலோ நமிதாவை, அப்படியே தூக்கி இடுப்பில் உட்கார வைத்து பாடல் முழுக்க ஓடி வருவீர்கள்.
பதில் 3.
நினைத்த பெண்களின் நாயகனாக நடந்துவருவீர்கள்.
பதில் 4.
காணாமல் போன நயன்தாராவைத் தனியாளாய் தேடி கண்டு பிடித்துவிடுவீர்கள்.
பதில் 5.
தமிழர்களெல்லாம் ஒருவருக்கொருவர் தமிழைப் பேசிக் கொண்டிருப்பார்கள்.
பதில் 6.
எழுத்தாளர் சங்கத்துல இருக்கறவங்க எல்லோரும் தாங்கள் வாசித்ததை, எழுதியதையும் தகுதியானவர்களோடு விவாதித்துக் கொண்டிருப்பார்கள்.
பதில் 7.
ஒரு பத்திரிகையும் இன்னொரு பத்திரிக்கையும் மக்களுக்காக மட்டுமே பாடுபடுவது நினைத்து பெருமிதம் கொள்வீர்கள்.
பதில் 8.
கதையை கதையா மட்டும் படித்து அதன் உள்ளடக்கத்தை நேர்மையான முறையில் விமர்சித்துக் கொண்டிருப்பார்கள்.
இது போன்ற கனவுகள்தான் ஒன்றின்பின் ஒன்றாக வந்துக் கொண்டிருக்கும். கூர்ந்து கவனித்துப் பார்த்தால், மேலே என் கேள்விகளுக்கும் உங்கள் கனவுகளுக்கும் இருக்கும் ஒற்றுமை புலப்படும். எப்போதோ நீங்கள் ஆசைப்பட்ட ஒன்று, எப்போதோ நீங்கள் எதிர்ப்பார்த்த ஒன்று, எப்போதோ நீங்கள் விரும்பிய ஒன்று, அதிகாலை ஆல்பா நிலையில் பதிந்திருக்கிறது.
அதுவே கனவாக மாறியிருக்கிறது. பின்னர் தொடர் கனவாகிவிட்டிருக்கிறது. அந்த கனவினை நினைவாக்க நீங்கள் நினைத்தால் மட்டுமே முடியும். இதைத்தான் பிரம்ம முகுர்த்தம் என சொன்னார்களோ என்றுகூட எனக்கு சந்தேகம் இருந்தது. தமிழில் வரும் பிரம்ம முகுர்த்தமும், ஆங்கிலத்தில் வரும் ஆல்பா தியானமும் ஒன்றாக இருக்கலாம். ஆனால் ஆங்கிலத்தில் சொல்லபடும் ஆல்பாகுத்தானே மதிப்பு அதிகம்.
யோசித்து பாருங்கள் முன்னமே நான் பிரம்ப முகுர்த்தம் என சொல்லியிருந்தால், கனவின் ஆழத்தை விடவும் கல்யாண வேலைகள்தான் உங்கள் நினைவுக்கு வந்திருக்கும். ஐயார் பெயரில் சில பொய்யர்களை பணம் கொடுத்துக் கூட்டிவந்திருப்போம். அவரும் மனனம் செய்ததை அர்த்தம் புரியாமல் ஒப்புவிப்பார். கல்யாணத்தை கவனிக்காமல் கண்டகண்ட கதைகளை பேசிக் கொண்டிருக்கும் பெண்கள், அரை தூக்கத்தில் இருக்கும் ஆண்கள், உழைத்துக் கொண்டிருக்கும் நண்பர்கள். உட்கார்ந்திருக்கும் உறவுகள் இப்படி இல்லாததையும் பொல்லாததையும் மட்டுமே நினைத்திருப்பீர்கள்.
நான், ஆல்பா என்று ஆங்கிலத்தில் ஆரம்பித்ததும் ஊருக்கும் உலகத்துக்கும் ஏதோ சொல்லவறேன் பேர்விழி மாதிரி என்னை கவனிக்க ஆரம்பிச்சிங்க. நானும் உங்க நினைப்ப முடிந்தவரை காப்பாத்தியிருக்கேன்னு நினைக்கறேன்.
அது என்னமோ தெரியலைங்க, வெள்ளைக்காரனுங்களை விட நாமதான் அவன் மொழியை நேசிக்கிறோம். இதுவும் ஆல்பா நிலையில் வந்த எண்ணமாக இருக்கலாமோ?
இருங்க, இருங்க எனக்கு தூகம் வர மாதிரி இருக்கு. இவ்வளவு நேரம் முழிச்சிருந்ததே பெரிய ஆச்சர்யம். நயன்தாராவைத தேடனும் அப்பறம் மிக முக்கியம் கோச்சடையான் இல்லை; நமிதா. அதுவும் ஐம்பது கிலோ. அல்பா.. ஐம்பது கிலோ.. அல்பா.. 50 கிலோ.. ஆல்லோ.. 50 கில்பா.... நமீம்மிம்மிம்மிமிமிம்மிம்ம்.......
- தயாஜி -
nammmidam (thmizharkalidam) evvalavo karuththukkal, ariviyal puurva unmaikal irunthaalum , athu ennamo aangilaththil, athaan na ENGLISH le saathaarana thamizh vaarththaigalukku oru sila varththaigale pOttu pesurappe eluthurappe thelichivittom na ellorukkum pOi sEruthu... ithe than ENGLISHkaaran MARKETING method nu solliyirukkano..?? athukku munnadiye, ippadi patta nilai varum nu therinje namme perusuge, athaangge namme munnOrgal "ikkarai maattukku akkarai pachai" nu sollittaangge pOlarukku... athey neraththule, ippakuuda namme aalu, thamizhargal veettule irukkum sinna sinna vaandungge konjam "kurukku" kelvigalai kEttuttalo, allathu konjam"arivupuurvamana" seythigale sarva saathaaranama, mukkiyma thaaththaa paattigalukko allathu appa ammakko theriyatathe sollitta, "unakku onnum theriyathu, nee sinna pulle, ellam kalikaalam, pesaame ulle po!" apdinnu solvathum undu... namme nilai... 50:50 than... epdina, muthal 50 = ellame nmmkitte irukku, aanaa namakku theriyale... innoru 50 = nammakitte ullatyhaiye namakke kodukkarathu, athai vida mOsama irukku...
பதிலளிநீக்குoru sinna kurippu, apdiye gap le pOttiinggale oru seythi, POLITICS... thuliyum kalanggamillatha UNMAI...!!
மகிழ்ச்சி நன்றி.... தொடர்ந்து அவ்வபோது உங்கள் கருத்தினை பதியவும்...
நீக்கு