Pages - Menu

Pages

ஜூன் 21, 2012

அதே மோதிரம் 2 - மர்மத் தொடர்

பாகம் 2
  


     காதலியில் அழுகுரல் கேட்டவுடன் அதுவரை அடங்கியிருந்த கண்ணீர் வெளிவந்தது. மாற்றி மாற்றி இருவரும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்கள். இனி அவர்கள் பேசுவதை கேட்போம்.

நீங்க போனை என்ன செஞ்சிங்க..
ஒன்னிமில்ல விடு; மன்னிச்சுடு....
சொல்லுங்க என்ன செஞ்சிங்க.. தூக்கி எறிஞ்சிங்கதானே....?”
ம்....விடுவிடு தப்பு என் மேலதான்.... அவசரப்பட்டுட்டேன்...
நீங்க என்ன செய்விங்க.... உங்க நிலமை தெரியாம நான் தான் அதிகம் பேசிட்டேன்... மன்னிச்சிடுங்க....இனி இப்படி பேச மாட்டேன்....
இல்ல...தப்பு என் மேலதான்...
இல்ல இல்ல என்மேலதான்... சரி போன் என்ன ஆச்சி உங்க குரல் விட்டுவிட்டு வருது....
போன் மட்டுமா..?கையும்தான் வீங்கிப்போச்சி...
அய்யோ என்ன ஆச்சி....? போனை தூக்கிபோட்டுட்டு சுவரை குத்தனிங்கலா...?”
ம்...
பாரேன்... இனி குத்தமாட்டேனு தானே சொன்னிங்க... போனையும் வீணாக்கிட்டிங்க பார்த்திங்கலா.... ஏன் அவ்வளவு கோவம் உங்களுக்கு... இப்போ நானும் போனை தூக்கி வீசிட்டு சுவரை குத்தனுமா....
வேணாம் வலிக்கும்...
இப்ப மட்டும் எனக்கு வலிக்கலைன்னு நினைக்கறிங்கலா...?”
கோவப்பட்டுட்டேன் விடேன்.
ஏன்தான் உங்களுக்கு மட்டும் இப்படியெல்லாம் கோவம் வருதோ தெரியலை...
அதான் மன்னிப்பு கேட்டுட்டேனே. மறுபடியும் ஆரம்பிக்கனுமா...?”
   இனி அவர்களின் உரையாடல் நமக்கு வேண்டாம். சமாதானம் செய்த பிறகும் சண்டை காலை இருவரும் வேலைக்கு கிளம்பும் வரை தொடரும். வீங்கிய கையுடன் தூங்காத விழிகளுடன் வேலைக்கு சென்றால், இருவருக்கும் நண்பர்களிடம் தீவிர விசாரனை நடக்கும். மணி அலுவலகத்தின் யாருடனும் சரியா பேசுவதில்லை. தொடக்கத்தில் நட்பின் இலக்கனமாக இருந்தவர்கள்தான். ஒன்றாய் சேர்ந்து பணி செய்தவர்கள்தான். ஓடும் குதிரையில் முதல் குதிரைக்குத்தான் மதிப்பு என எடுக்கப்பட்ட முடிவால் ஏற்பட்ட விபரீதம். முதல் குதிரையாக இருக்க ஆசைப்பட்டார்களே தவிர நண்பர்களாக இருந்து இனைந்து பணி செய்வதை மறந்துப் போனார்கள். மணியும் இதற்கு விதிவிலக்கல்ல. அந்த குதிரை கொஞ்சம் மெல்லமாகத்தான் ஓடும். ஆனால் தொடர்ந்து ஓடும். அந்த நம்பிக்கைதான் இந்த குதிரைமீது நம்பிக்கையை ஒட்டிவைத்திருக்கிறது.
    வீசி எறியப்பட்ட கைபேசிக்கு என்ன ஆனதோ தெரியவில்லை. யார் அழைத்தாலும் அதிருமே தவிர இசைக்காது. யார் எண்ணும் தெரியாது. வேறு வழி இல்லை. புதிய கைபேசிக்கு நேரம் வந்ததாக நினைத்தான். இப்படி நடக்கும், நல்லதையும் கெட்டதையும் தனக்கு சாதகமாக்கிக் கொள்வது மணியின் பழக்கம். வருட இறுதியில் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த பணத்தில் இருந்து எடுக்கும் நிலை வந்தது. எடுக்கும் தொகையில் இருந்து சிறு மடங்கேனும் அதிகம் வைப்பதால் அந்த வைப்புத்தொகை அதன்  மதிப்பை உயர்த்திய வண்ணம் இருந்தது. பணம் எடுக்கும் நேரத்தில்......ஆனாலும்........?


    பணம் எடுக்கும் நேரம் எப்போது இதை திரும்ப வைப்போம் என்ற எண்ணம் எழுந்தது. ஆனாலும் இது வழக்கமானதுதானே என தனக்குத்தானே சமாதானம் செய்துக் கொண்டு பணத்தினை எடுத்தான். பணம் வைக்கப்பட்டிருக்கும் பெட்டிக்கு அருகில் இருக்கும் குறிப்பு புத்தகத்தில் எடுத்த பணத்தின் மதிப்பைக் குறித்துக் கொண்டான். கொஞ்சம் அந்த குறிப்பினை திருப்பிப் பார்க்க கொஞ்சம் நிம்மதி. இதுவரையின் எடுத்த பணம் திரும்ப வைக்கப்பட்டிருக்கின்றது.
    இரண்டு நாள்களுக்கு பிறகு, புதிய கைபேசியை வாங்கிய மகிழ்ச்சியில் காதலிக்கு அழைப்புவிடுத்தான்.
பா....... உன் போன்ல படம் அனுப்பனா கிடைக்குமா..?”
தெரியலையே. எதுக்கும் அனுப்பிப் பாருங்களேன். கிடைக்குதா பார்ப்போம். என்ன புது போனா...?”
ஹிஹி...ஆமா....
தேவையா இந்த செலவு இப்போ நமக்கு... அந்த பணத்தில் கல்யாணத்துக்கு எதாவது செய்திருக்கலாம்தானே...?”
ஆமா அந்த முன்னூறு வெள்ளியிலதான் உனக்கு புடவையும் நாலு பவுனு சங்கிலியும் வாங்கலாம்னு இருந்தேன் பாரு...
இந்த நையாண்டிப் பேச்சுக்கு மட்டும் குறைச்சல் இல்லை

சரி விடேன்.. இப்போ போட்டோ வேணுமா வேணாமா...? ”

வந்திடுமே உடனே மாப்பிள்ளைக்கு சுர்ருனு கோவம்...

பாரதியார்தான் சொல்லியிருக்காரு ரௌத்திரம் பழகுன்னு

இதுக்கு நான் ஏதும் சொல்லனுமா.....?”

வேணாம் தாயி... ஒன்னும் சொல்ல வேணாம்... எனக்கு வேலைக்கு மணியாகுது.... படம் பிடிச்சி அனுப்பறேன், பாரு கிடைக்குதான்னு... அதுக்குன்னு கிடைக்கற வரைக்கும் அனுப்புங்கன்னு சொல்லிடாத... சரியா... கிடைக்குதான்னே தெரியலை... மணியாச்சி வேற...

ம்...

என்ன வார்த்தை அது ம்வேற வார்த்தையே உனக்கு கிடைக்காதா...? ”

அதான் எல்லாம் நீங்கள் பேசிட்டிங்களே... நான் எதுவும் சொன்னா... என்னையே காரணம்னு சொல்லிடுவிங்க...

இப்ப என்னதான் சொல்ல வர...?”

ஐயா சாமி .. உங்களுக்கு மணியாச்சி. உங்க புது போன்ல எனக்கு படம் பிடிச்சி அனுப்புங்க, பார்க்கறேன்... ஒன்னே ஒன்னு போது ராசா நானும் ஸ்கூலுக்கு போகனும்.. புரியுதுங்கல...ராசா...

ஹிஹிஹ்... ஓகே ஓகே... பார்த்து போ... ஸ்கூலுக்கு போனதும் மெசேஜ் அனுப்பு..

இல்லைனானு  எங்களுக்க்கு தெரியாது பாருங்க.... இந்த கொஞ்சலுக்கு மட்டும் குறைச்சல் இல்ல...

“ i love u ”

“ i love u too ”

    மணி தன் காதலியுடன் பேசிக்கொண்டே வீட்டின் வெளி வந்தான். கதவைச் சாத்தியபின் தொடர்ந்த உரையாடன் அங்கேயே முடிந்தது. நல்ல வேலை இன்று சீக்கிரம் பேசிவிட்டார்கள். பிறகு என்ன..?; மணியும் எத்தனை நாள்தான் அலுவலகத்துக்கு தாமதமாகச் சென்று காரணம் சொல்வான். அலுவலகத்தில் அனைத்து வேலையும் தெரிந்த ஆசாமி என்பதால் கொஞ்சம் தப்பிக்கின்றான். இப்படியாக அவன் மீது அக்கறை காட்டுவாரும் உண்டு.

  சீக்கிரம் பேசி முடித்த மணி தன்னைத்தானே புகைப்படம் எடுக்கத் தயார் ஆனான். புகைப்படம் எடுக்க முயற்சித்த இரண்டு முறையும் சம்பந்தம் இல்லாத ஒருவரின் வருகையால் கொஞ்சம் நிறுத்தினான். மீண்டும் யாரும் வருவதற்குள் படம் பிடிக்க முயற்சித்தான். மறுபடியும் யாரொ ஒருவர் அவனது குறுக்கே செல்லும்படி ஆனது. ஆள் வருவதை சத்தம் வைத்து தெரிந்த மணி தொலைபேசியைக் கவனிப்பது போல பாசாங்கு செய்தான். ஒருவேளை மணி நிமிர்ந்துப் பார்த்திருந்தால் அவனுக்கு இதயத்துடிப்பு நின்றிருக்கும்.
  
    தலை இல்லாத அந்த உருவத்தை அவன் கவனிக்காத்து யார் செய்த புண்ணியமோ. என்ன தலை இல்லாத உருவமா...? இதற்கே ஆச்சர்யம் என்றால் இதற்கு முன்னு இதே தலையில்லாத உருவம்தான் அவனைக் கடந்துச் சென்றது. அப்போதும் தான் கைபேசியைப் பார்ப்பது போல் பாசாங்கு செய்துக் கொண்டதால் தப்பித்தால்.

    மூன்றாவது முறையாக கைபேசிக் கேமராவை முகத்திற்கு நேரே தூக்கிப்பிடித்தான். நேரமாகிக்கொண்டிருந்தது. பட்டனை அழுத்தும் முன்பு; மூன்றாவது முறையாகவும் காலடி சத்தம் கேட்டது. இந்த முறை மிக அருகில். சட்டெனத் திரும்பினால். அதிர்ச்சியில் உறைந்தான். கைபேசி இன்னமும் அவன் கையில். அதில் தவறுதாலக அழுத்தப்பட்ட பட்டன் மூலம் கேமராக்கு பதில் வீடியோ இயங்கிக் கொண்டிருந்தது. அந்த வீடியோ அங்கு நடக்கின்றதை பதிவு செய்துக் கொண்டிருக்கிறது. அந்த தலை இல்லாத உருவம்...........

(தொடரும்)
நன்றி மார்ச் 2012 அன்பு இதயம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக