Pages - Menu

Pages

பிப்ரவரி 09, 2012

முகமற்றவன் பதவியுற்றவன்



அடையாளம் தெரிந்த வார்த்தைள்
சேர்ந்து
அடித்து உதைக்கின்றன....

வலியை பொருக்க முடியவில்லை
கேள்விக்கு மேல் கேள்விகள்
கேட்க கேட்க

வெட்கமின்றி

இளிக்கிறேன்

வேறென்ன செய்ய்

வலக்காதில் நுழைந்து
இடக்காதில் வெளியாகின்றன

காதடைத்த உத்தம பிம்பம்
உடைந்து
ரத்தம் ஊட
புத்தன் போர்வையும்
வழிகிறது.......

போட்டிருந்த வேடமும்
காத்து வந்த பட்டமும்

குடல் பிடுங்கும்
நாற்றத்துடன்
காதில் வழிந்து
துவாரத்தைத் தேடி
ரோமங்களை விலக்கி
மூக்கை நுகர்கின்றன

நுகர்ந்து நுகர்ந்து
மூளையை நகர்த்துகின்றன

கொஞ்சம் கொஞ்சமாக
மூளை குலைகிறது

அதன் வீச்சம் கண்களை
பிதுக்குகிறது

கண்கள் வெளிவரும் முன்னமே
மூளையும் மூளைசார்ந்த
நரம்புகளும்

மூக்கின் துவாரம் வழியே
முன்னேறுகின்றன

என் நாற்றம்
என்மீதான நம்பகத்தன்மையை
சந்தேகிக்கிறது

சேர்த்து வந்த கூட்டமெல்லாம்
சில அடிகள் தாமதிக்கின்றன

அவர்கள் விழிக்கும் முன்னமே
என் நாற்றத்தில் அவர்களுக்கும்
பங்களிக்க வேண்டும்

மூக்கின் வழியே வடியும்
மூளையை

அவர்கள் வாயின் வழியிலே
நுழைத்திட்டால் போதும்

நாங்கள் வித்தியாசம் மறப்போம்

நான் தொடர்ந்து அவர்களை அல்லது அதுக்களை
வழிநடத்துவேன்

அதிகம் செலவில்லை

ஒற்றை மேடை

ஒரேயொரு மைக்

வழக்கமான வாக்குறுதி @ கள்

அவ்வளவுதான் அவ்வளவுதான்

அத்தனை பேரும்
அத்தனை பேரும்

எத்தனை கேள்விகள்
வரினும்
எத்தனை சாட்சிகள்
வரினும்

உத்தமன் நான் என்பர்
புத்தனும் யான் என்பர்

எப்படியும் நம்புவர்
வழிகளற்றவர்

நாற்றம் வழிந்தும்
முகச்சாயம் அழிந்தும்
மூளை குலைந்தும்
மூக்கில் வழிந்தும்
வீச்சம் தொடர்ந்தும்

நானே தலைவன்
இனியும்
நான்தான் தலைவன்

எனகென்ற
மனசாட்சி
அது
மயிரா போச்சி





-தயாஜி-

4 கருத்துகள்:

  1. // அவ்வளவுதான் அவ்வளவுதான்

    அத்தனை பேரும்

    அத்தனை பேரும்

    எத்தனை கேள்விகள்

    வரினும்

    எத்தனை சாட்சிகள்

    வரினும் //

    செய்யும் "நாத்த வேலை" அறிந்து மனசாட்சி எதிரோளிக்கின்றதோ ???...

    பதிலளிநீக்கு
  2. ‎//புத்தன் போர்வையும்
    வழிகிறது.......//

    //உத்தமன் நான் என்பர்
    புத்தனும் யான் என்பர்//

    ஹ்ம்ம்ம்...
    'வழிந்த' "புத்தன்" போர்வையில் இருந்த மிச்சம் மீதியை வழித்து, அதை ஒரு கிண்ணத்தில் ஊற்றி குடித்து, அதை வைத்து மீண்டும் 'தென்' போல சொட்ட சொட்ட பேசி கூட்டத்தை மயக்கி, மீண்டும் "புத்தன்" -ஆகும் "@#&$"-இக்கும் தமக்கும் இனி யாரும் ஒப்பிட்டு பேசக்கூடாது என்று எண்ணி தான் போலும் அந்த "புத்தன்" கூட தலை மறைவாய் வாழ்ந்து வருகிறார்... :( :)

    பதிலளிநீக்கு
  3. மகிழ்ச்சி; நன்றி தோழி.............

    பதிலளிநீக்கு