Pages - Menu

Pages

அக்டோபர் 14, 2011

நிர்வாணம் குறித்த தீர்மானம்






நிர்வாணம்
எப்படிப் பார்க்கப்படுகிறது....
என்வரையில்
தியானம்.....

எந்த தடையும் இருக்காமல்
காற்றோடுக் கலந்துப் பார்க்கிறேன்....

என் தேகம் முழுதும்


ஊர்ந்துக் கவனிக்கிறேன்....

இந்நிலை;
பரவசப்படுத்துகிறது......

மேனி உரோமங்களை

ஒன்றின் பின் ஒன்றாக

தடவுகிறேன்......

முகர்கிறேன்...

ஆடைக்கு பின்னால்
அடைக்கப்பட்ட வியர்வை வாசம்
இதயத்தில் நின்றுவிட்டு வருகிறது........

ஏதோ பிசுபிசுப்பு
உட்காரும் போதும்.....
நடையில் உறுப்புகள்
உரசும் போதும்....

இத்தனை கவனமாய்
கண்ணாடியைக் கூட கண்டதில்லை.....

நிர்வாணத்தால்
தியானம் கற்கிறேன்....

அறைக்கதவு பூட்டியிருப்பதால்
இப்படியும் அப்படியும்
உலாவ....

பிசு பிசுத்த இடங்களெல்லாம்....
வரண்டு போகின்றன............

ஆனாலும் ஆச்சர்யம்
வரண்டாலும் வழுவழுப்பே
கொடுக்கிறது.........

ஆடைப் போர்வைக்கும்
அடங்கிய உடலுக்கும்
தீராத பகைதான்..........

ஒவ்வொரு ஆடையினையும்
வீசிய பிறகே...

நிர்வாணம் என்பது
தியானம் பிறக்கிறது....

பிறந்த மேனிக்கும்
திறந்த மனதுக்கும்
என்னதான் ஒற்றுமை.....

அறிவிற்கும் மனதிற்கும்
இடைபட்ட நிலை

நிர்வாணத்தின்
தியானம்..........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக