Pages - Menu

Pages

செப்டம்பர் 29, 2011

சுருதி சேராத ராகங்கள் - ‘படித்த பின் பார்வை’


சுருதி சேராத ராகங்கள் - ‘படித்த பின் பார்வை’



கண்ணதாசனின் ‘சுருதி சேராத ராகங்கள்’ படித்தேன். நான்கு மாறுபட்ட குடும்பத்தில் நடக்கும் பாலியல்தான் கதைக்களம்.






முதல் குடும்பம். கணவனின் உடல் பசிக்கு ஈடு கொடுக்க முடியாமல் தவிக்கிறாள் மனைவி. என்னதான் அவர்களுக்குள் நெருக்கத்தில் குறைவில்லையென்றாலும்; இரவில் கணவனின் கணம் மனைவிக்கு தாங்கமுடியாத வலியைக் கொடுக்கிறது. கணவனின் உடல் பசிக்கு மட்டுமாவது ஒருத்தி தேவை என தேடுகிறாள்.






இரண்டாவது குடும்பம். பல நாள் பேசாமல் இருந்த மனைவியிடம் தானே பணிந்து பேச ஆரம்பிக்கிறான் கணவன். அதனைத் தொடர்ந்து கணவன் மனைவி இருவரும் தன் தவறுகளை உணர்ந்து பேச ஆரம்பிக்கின்றார்கள். மனைவி கர்பமாகிறாள். கணவனுக்கு; அவனையும் மீறிய சந்தேகம் எழுகிறது. இதற்கு முன்பு வரை மனைவி செய்த்தெல்லாம், இப்போது சந்தேகத்தை ஆழப்படுத்துகிறது. குத்தலாக பேச ஆரம்பிக்கும் கணவனின் சந்தேகம் மனைவியை மேல்மாடியில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு செல்ல காரணமாகிறது.






மூன்றாவது குடும்பம். கணவன் மீது தீராத காதல் வைத்திருக்கிறாள் மனைவி. தினமும் கணவன் தன் அருகிளேயே இருக்க வேண்டும் என விரும்புகிறாள். ஒவ்வொரு இரவையும் கணவனுடன் கட்டிலில் கழிக்கவே ஆசை கொள்கிறாள். கணவனுக்கோ உடல் பசி மட்டுமே குடும்பத்திற்கு முக்கியமல்ல. காம்ம் ஓர் அங்கமாகவே படுகிறது. மனைவியில் இந்த கட்டில் ஆசையை எப்படி சமாளிப்பது என யோசித்தே அவளுக்கு அறிவுறைகள் சொல்லி; அவளை வருத்தப்பட வைக்கிறான்.






நான்காவது குடும்பம். குடும்பம் என சொல்வதைவிட ஒரு இளம் விதவை எனவே சொல்லலாம். அவள் ஆதரவற்றவள். ஆசிரியை. அவளைவிட பதினைந்து வயது குறைந்த ஒரு இளைஞனை சில ஆண்டுகளாக வளர்த்து வருகிறாள். என்னதான் அவள் மனம் அவளின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் புற சூழல் அவள் மனக்கட்டுப்பாட்டை தகர்க்கிறது. ஒரு நாள் உனர்வுக்கு அடைமையாகி வீட்டு வாசலில் படுத்திருந்த இளைஞனை உள்ளே வந்து படுக்க சொல்கிறாள். பின்னர் நேரம் ஆகா ஆகா அவளை அறியாமல் அவளது கால்கள் அந்த இளைஞனின் பாய்வரை செல்கிறது. மறுநாள் நன்கு யோசித்து ஊருக்காக ஏன் வழவேண்டும் நாம் நமக்கா வாழ்வோம் என அவளும் அந்த இளைஞனும் முடிவெடுக்கின்றார்கள்.






இந்த நான்கு குடும்பத்தினருக்கும் நெருக்கமான மனோவியல் மருத்தவரிடம் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு எப்போதும் தீர்வை பெறுகின்றார்கள். அவரின் உரையாடல் நடைமுறைக்கு ஏற்ற வகையில் அமைந்திருக்கின்றன.






உதாரணமாக ;






கணவனுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அவன் பலத்தால் பாதிக்கப்படும் மனைவி, பலம் கொண்ட தன் கணவனை பலவீனப்படுத்த வேண்டும். அல்லது வலியை தாங்கித்தான் ஆகவேண்டும்.






ஊருக்கு பயந்து வாழ்வது ஒன்று. தனக்கான வாழ்க்கையை ஊருக்க பயப்படாமல் வாழ்வது ஒன்று. வெளியில் ஊருக்கு பயந்த்து போல் இருந்து உள்ளுக்குள் ரகசிய வாழ்க்கை வாழ்வது ஒன்று.






கணவன் மனைவியிடையே எல்லா கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. மனைவிதானே சொன்னாள் அதனால் என்ன..? கணவன்தானே சொன்னான் அதனால் என்ன..? போன்ற எண்ணங்கள் பிரச்சனைகளை குறைக்கும்.






கணவன் மனைவி கருத்துப் பரிமாற்றம் செய்யும் போது இரவுப் பொழுதில் கட்டிலில் செய்வது பிரச்சனைகளை குறைக்கவல்லது.






நான்கு குடும்பத்தினரும் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வாக கடைசியில் மனோவியல் மருத்துவர் மூன்று பக்கங்கள் பேசி தீர்த்து வைக்கின்றார்.






ஒரே நாளில் இந்த புத்தகத்தை படித்து முடித்து விட்டேன். இதற்கு முன் மூன்று நாள்களாக ‘நாஸ்டர்டாமஸ் சொன்னார் நடந்தது’ என்ற புத்தகத்தைப் படித்து தீர்க்கத்தரிசி குறித்து தெரிந்தும் குறிப்பெடுத்தும் கொண்டேன்.






படித்து முடித்த பிறகு ஏதாவது சின்ன களைப்பு ஏற்படட்து. சில சமயம் இப்படி எனக்கு ஏற்படுவதுண்டு. அதனைத் தீர்க்கவே எளிமையான புத்தகங்களை எதையாவது படிப்பேன். சின்ன சின்ன கவிதைகள் வாரா மாத சஞ்சிகைள் நகைச்சுவைகள் அடங்கும்.






அப்படி ஏற்பட்ட களைப்பை கலைவதற்கு புத்தக அலமாரியில் புத்தகங்களைத் தேடும் போது கண்ணதாசனின் இந்த புத்தகம் கையில் கிடைத்தது. தொடக்கத்தில் இருந்து இவர்பால் ஈர்ப்பு உள்ளதால் இந்த புத்தகத்தை படிக்க எடுத்தேன். பக்கங்கள் குறைவு.ஈருப்பு.ஏதாவது இருக்கும் என்ற நம்பிக்கை.






இந்த மாதிரியான புத்தகங்கள் நேரத்தை வீணடிக்கலாம்; இதற்கு செலவிட்ட நேரத்தை தமிழில் முக்கியமாகக் கருத்தப்படும் நாவல்களுக்கு செலவிட்டிருக்கலாம்; இந்த நாவல் என் அடுத்தக் கட்ட எழுத்து பயணத்திற்கு பெரியாத பயன்படாது என்கிற ரீதியில் என் முன்னேற்றத்தில் அக்கறை உள்ளவர்கள் சொன்னார்கள்.






அவர்கள் கூற்றிலும் உண்மை இல்லாமலில்லை.






இந்த நாவலை இப்போது நான் படித்ததன் காரணம் என் களைப்பை தீர்க்கவே அன்றி; என் முன்னேற்றம் கருதி அல்ல. 28 தேதி தொடங்கி மறுநாள் காலையில் 29.9-ல் படித்து முடித்துவிட்டேன். இரவு வேலை என்பதால் படிக்க முடிந்தது. அப்படி இப்படி என மொத்தமே செலவான நேரம் ஏறக்குறைய 3 மணி நேரமே இருக்கும். ஆக நேரமும் அதிகம் வீண் போகவில்லை.






இந்த நாவலைப் பற்றி சொல்லவேண்டுமெனின்; சிறுகதை ஒன்றில் சொல்ல வேண்டியதை நீட்டிக்கொண்டு போய் நாவல் என்று சொல்லியிருக்கின்றார்கள். இது குறுநாவல்.






இன்னமும் கூட ஆழமாக இந்த நாவலில் சொல்லியிருக்க முடியும். ஆனால் அப்படி எழுதப்படவில்லை. மேலோட்டமாக சொல்லப்பட்டிருக்கின்றது. மருத்துவரின் ஆலோசனையையும் கதையின் ஊடே சொல்லியிருக்க முடியும். அப்படி செய்யவில்லை. எழுதியவர் கண்ணதாசன் என்பதாலும்; நான் கண்ணதாசனின் விரும்பி என்பதாலும் இதனைப் படித்ததாக வைத்துக் கொள்ளலாம். இருந்தும் வழக்கம் போல இந்த ‘சுருதி சேராத ராகங்கள்’ குறுநாவல் மூலம் என்னால் கற்றுக்கொள்ள முடிந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக