Pages - Menu

Pages

ஆகஸ்ட் 14, 2010

புத்தகக்காதலிகள்....


கொஞ்ச இடைவேளைக்கு பிறகு "காத்திருந்து" வாங்கிய புத்தகங்கள் இவை.

# சிவமயம் பாகம் இரண்டு

- என் அபிமான எழுத்தாளர் இந்திராசௌந்திரராஜன் எழுதிய புத்தகம் இது. சில ஆண்டுகளுக்கு முன் இந்த முதல் பாகம் படித்து மிகவும் அதிசயித்தேன்.அதன் பின் இதன் இரண்டாம் பாகம் இருப்பத்தை சமீபத்தில்தான் இணையம்வழி தெரிந்துக் கொண்டேன்.இப்போது வாங்கியும்விட்டேன்.சிவமும் சித்தர்களும் செய்யும் விளையாட்டில் மனிதர்களின் பங்களிப்பு குறித்து தனக்கே உரிய எழுத்தாளுமையில் சொல்லியிருப்பார் இந்திரா சௌந்திரராஜன்.


# ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதிங்க


- இந்த தலைப்பால் ஈர்க்கப்பட்டு கையில் எடுத்தேன் ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சி . இதன் எழுத்தாளர் கோபிநாத். விஜய் தொலைக்காட்டி தொகுப்பாளர். இவரின் 'நீயும் நானும்' எனும் ஆனந்த விகடன் இதழ் தொடரின் தீவிர வாசகன் நான்.


#அம்பலம்


-நம்ப தலைவர் சுஜாதா வழிநடத்திய இணைய இதழின் தொகுப்பு இந்த நூல். இணையத்தில் தவறவிட்ட நான் இப்போது வாங்கிவிட்டேன். கடைக்காரர் ஒவ்வொரு சுஜாதாவின் புத்தகத்தை காட்டும்பொழுதும் "வாங்கிட்டேன்".."வாங்கிட்டேன்" எனும் என் பதிலுக்கு அவர் "அப்போ இந்தா நீங்களேத் தேடிக்கோங்க.." என்று தந்த ஆசிவாதத்தால் கிடைத்த புத்தகம் இது.


# பட்டாம்பூச்சி (பரிசு பெற்ற கவிதைகள்)

# பாலகாண்டம் (கட்டுரைகள்)

# கண்பேசும் வார்த்தைகள் (பாடல் பிறந்த கதை)


இவை மூன்றும் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் எழுதியுள்ளார். பாடல்களின் வரிகள் மூலம் என்னைக் கவர்ந்த இவர் இதிலும் கவர்வார் என்பதில் ஐயமில்லை.


# பூமிப்பந்தின் புதிர்கள்


- எழுத்து க.பொன்முடி. நமது பூமியில்..! ஆங்காங்கே நடக்கும், இருக்கும் அதிசயம் , ஆச்சர்யம் குறித்து சொல்லும் புத்த்கம் இது. நான் எழுதும் கதைகளில் வரும் அமானுஷ்யங்களுக்கும், ஆச்சர்யங்களுக்கும் இவ்வகை புத்தகங்கள் உதவும். என கதையில். கதையையும் தாண்டி ஏதோ தகவல்கள் இருப்பதாக படித்தவர்கள் சொல்கின்றார்கள்.


# உனக்குள் இருக்கும் வைரத்தை கண்டுபிடி


-இதன் படைப்பாளர் அரிந்தம் சவுத்ரி. வாழ்வில் போராடவும் தொடர் வெற்றிக்கும் தேவையான ஒன்பது குணங்களைச் சொல்லும் நூல். இது ஒரு மொழிபெயர்ப்பு நூல் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த புத்தகங்களை ஒரே கோட்டில் வைக்க முடியாது. அதே போல்தான் என் வாசிப்பையும் என்னால் வகைப்படுத்த இயலவில்லை.சில புத்தகங்கள் என் கொள்கைக்கு முரணானவை சில புத்தகங்கள் என்னையே எனக்கு வேறாகக்காட்டுது.. எது எப்படியோ நான் தேடி வாங்கிய புத்தகங்களைவிட என்னை தேடிய புத்தகங்கள்தான் அதிகம். எதற்கும் ஒரு காரணம் உண்டு என்ற என் சிந்தாந்தத்தை நோக்கியே என் தேடலை வைக்கின்றேன் இப்போதும்.

விரைவில் இந்த புத்தகங்களை வாசித்து நேசித்து... வழக்கம்போல் உங்களோடு பகிர்கின்றேன். நன்றி


தயாஜி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக