நள்ளிரவு மணி 12.00 ஆழ்நிலை தூக்கத்தில் மிதந்துக் கொண்டிருந்தேன். ‘செல்லம்...ஐ..லவ்....யூ’ என பிரகாஷ்ராஜ் குரல் என்னை எழுப்பியது. கைபேசியின் சத்தம்தான் அது. தூக்கம் கலிந்தும் கண்களை மூடியவாறுப் பேசத் தொடங்கினேன்.
“வணக்கம் யார் பேசறிங்க..?”
“வணக்கம் மணி, நான் தான் தேவி பேசறேன்.”
பெயரும் குரலும் பரிட்சயமில்லாததால், தொலைபேசி எண்ணை கவனித்தேன், ‘ப்ரைவட் நம்பர்’ என இருந்தது.
“ம்.. நீங்க...”
“பார்த்திங்களா மறந்துட்டிங்க...என்னங்க நீங்க..”
“...................”
அந்த குரல் மீண்டும்,
“நீங்களும் மறந்துட்டிங்களா..?” அவள் அழுதாள். அது அழுகையா சிணுங்களா எனத் தெரியவில்லை.
நான்,
“அப்படியில்லைங்க.. எனக்கு ஞாபக சக்தி குறைவு அதான் நீங்களேச் சொல்லுங்களேன்.”
சலிப்புடன்,
“ம்.. நானே சொல்றேன். நான் தேவி. ஒரு தடவை புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் சந்திதிருக்கோம். நீங்கதான் அறிவிப்பு செய்தீங்க... அப்பறம் கவிதைகூட சொன்னீங்க. நான், கடைசியா உங்ககிட்ட வந்து பேசி உங்கள் கையொப்பம் கேட்டேன். நீங்களும், ‘நல்லதே நடக்கும் நம்பிக்கையுடன் மணி’ அப்படின்னு எழுதி கொடுந்தீங்க..”
அந்தப் பெண்ணின் முகம் எனக்கு லேசாக நினைவுக்கு வந்தது. சிரித்தேன். கண் திறக்காமல்.
“ஓ, நீங்களா..? உங்களுக்கு மட்டுமில்லை நான் எல்லார்க்கும் அப்படித்தான் கையொப்பம் இடுவேன். சரி என்னங்க இந்த நேரத்தில்..?”
“உங்ககிட்ட கொஞ்சம் பேசனும் பேசலாமா..?”
தூக்கம் ஒரு புறம் இழுத்தாலும் அந்த நேரத்தில் தேவியின் குரல் என்னைக் கவர்ந்தது.
“ம்.. என்ன பேசப் போறிங்க..?”
“தற்கொலை செய்துக்கிறது கோழைத்தனமா..?”
“ஏங்க திடிர்னு இந்த கேள்வி..?”
“பதில் சொல்லுங்களேன்..”
“தற்கொலை செய்றது தைரியமான செயல்..”
“அப்படியா..?!”
“ஆமாங்க, வாழ்க்கையை முழுமையா வாழ பயந்து சிலர் எடுக்கிற சில நிமிட தைரியமான முடிவுதான் தற்கொலை”
“வாவ்.. பதிலை கூட கவிதையாய் சொல்ல உங்களால் மட்டும்தாங்க முடியும்...”
(கவிதையா..?எனக்கு அப்படியேதும் தெரியவில்லை.உங்களுக்கு..?)
நான் தொடர்ந்தேன்,
“அப்படியா..! சரிங்கா ஏன் இப்படி ஒரு கேள்வி..?”
“நான் அப்படி செய்ய நினைச்சேன்”
எனக்குத் தூக்கிவாரிப்போட்டது.
“என்னங்க சொல்றிங்க..?”
“அவசரப்படாதீங்க..இன்னும் சொல்லி முடிக்கல..தற்கொலை செய்யலாம்னுதான் போனேன். அப்போ ஒரு ஆசிரமத்தின் தொலைபேசி எண் கிடைச்சது..சரி கடைசியா என் பிரச்சனைக்கு இங்க தீர்வு வரும்னு நினைச்சி போன் செய்தேன். அவங்க பேசினது எனக்கு ஆறுதலா இருந்தது. இப்போ அந்த ஆசிரமத்துலதான் இருக்கேன்.”
சட்டென்று ஒரு குரல்,
“மாமா இன்னும் தூங்கலையா மணி என்ன மாமா...?”
“போன் பேசறன்.. மணி ஒன்னாவப்போது. நீ தூங்கு நான் அப்பறம் தூங்கறேன்..”
“ச..ரிமாமா..” வார்த்தைகள் உளறி தூக்கம் தொடர்ந்தது.
அது என் அத்தை மகன். அத்தை வீட்டில் வேலை நிமித்தமாக தங்கியிருப்பதால் அவனோடு படுக்கையைப் பகிர்ந்துக் கொண்டிருந்தேன்.(பின்குறிப்பு; படுக்கையை மட்டும்..!)
“சோரிங்க...பக்கத்துல அத்தை மகன் தான். உங்களுக்கு அப்படியென்னங்க பிரச்சனை.?”
“அதை தெரிஞ்சி நீங்க ஒன்னும் செய்ய முடியாதே.. ஏன் கேட்கறிங்க..?..ம்..”
“என்னைப் பொறுத்தவரைக்கும், நம்மை சுற்றி நடக்கும் எல்லாவற்றுக்குமே.. ஒரு காரணம் இருக்கும்னு நம்பறேன்.. இப்போ நீங்க இந்த நேரத்தில் என்கிட்ட பேசறதுகூட ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட ஒன்னாதான் இருக்கும்னு நம்பறேன்..”
சிரித்தவாறே
“பரவாயில்லையே கவிஞருக்கு நிறைய விசியம் தெரிஞ்சிருக்கே.. சரி..சரி என் கதையைக் கண்டிப்பா சொல்லனுமா..?”
“தேவி. அது உங்கள் விருப்பம்.. நாளைக்கு காலையில நான் அலுவலகத்தில் இருக்கனும்.அதுக்கு சீக்கிரம் படுக்கனும். நாம நாளைக்குப் பேசலாமா..?”
அவள் சிணுங்கியவாறே,
“ம்..சரி நாளைக்குப் பேசலாமா..?”
“நானும் அதைதானே சொன்னேன்..”
“சரிங்க மணி நாளைக்கு நானே ‘கோல்’ செய்றேன். குட் நைட்..”
பேசி முடித்த பின்னரும் அன்று சந்தித்த வள் முகம் எனக்கு அவ்வளவாகத் தெரியவில்லை. மீண்டும் ஒரு முறை பார்த்தால் போதும் ஞாபகத்தில் வந்துவிடும். கொஞ்சம் குழப்பம். அப்படி என்ன தற்கொலை செய்யும் அளவுக்கு தேவிக்கு பிரச்சனை..? ஒரு நாள் தானே பார்த்தோம், அதை ஏன் என்கிட்ட சொல்லனும்..? இப்படி பலக் கேள்விகளுக்கு நாளை பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தலையணையைக் கட்டியணைத்தேன்.
.................................................................................................................
மறுநாள் காலை நாளிதழ் படித்ததும் அதிர்ச்சி. இளம் பெண் தற்கொலை என்றிருந்தது. உடனே கைபேசியை எடுத்து நேற்று இரவு பேசிய எண்ணை தேடினேன். கிடைக்கவில்லை. குழப்பம் என்னை சூழ, நேற்று தேவியிடம் அவளது பிரச்சனையை கேட்டிருக்கலாமே என தோன்றியது. ஒரு வேலை அவளது தற்கொலைக்கு நானும் மறைமுக காரணமாக இரிப்பேனோ..? அவள் தற்கொலைக்கு முன்தான் என்னிடம் பேசினாளோ..? ஒருவேலை போலீஸார் அந்த கைபேசியை பரிசோதித்தால், என் மீது சந்தேகம் திரும்புமோ..?
தற்போதுதான் வெலையில் சேர்ந்து குடும்பப் பாரத்தை குறைக்கத் தொடங்கியுள்ளேன். இந்த நேரத்தில் இப்படியோர் இடியை என குடும்பம் தாங்காது. இன்றைய தினம் சீக்கிரமே வீடு திரும்பிவிட்டேன். சீக்கிரம் என்பது எங்களைப் பொருத்தவரை இரவு மணி 10.00.
இரவும் எனக்கு பகல் போலதான் தோன்றியது. ஏனெனில் காலையில் ஏற்பட்ட குழப்பம் என்னை யோசிக்கவிடாமல் தடுத்தது. நள்ளிரவு மணி 12.00.
“செல்லம்..ஐ..லவ்..” கைபேசியைத் தொடர்ந்து கத்தவிடாமல் உடனே எடுத்தேன். மறுமுனையில் அவள்தான்..
“என்ன மணி பயத்தில் இருக்கிங்கலா...?”
“என்ன...எ...ன்...ன... செல்றிங்க..?”
“இல்ல.. எப்போதும் வணக்கம் சொல்லுவிங்க.. இன்னிக்கு அமைதியா இருக்கிங்க அதான் கேட்டேன்”
பெருமூச்சுடன் ஆரம்பித்தேன்,
“இப்போதாவது உங்கள் பிரச்சனை என்னன்னு சொல்லுங்களேன் ப்லீஸ்”
அவள் சிரித்தாள். எப்படியும் இன்று அவளது பிரச்சனைக்கு ஒரு தீர்வு கொடுத்தேயாகவேண்டும் என தற்சமயம்தான் முடிவெடுத்தேன். அவள் இன்னும் உயிரோடு இருப்பது எனக்கே என் உயிர் திரும்ப வந்தது போல் இருந்தது.
“எல்லாத்தையும் ‘போன்ல’ சொல்ல முடியாது மணி. வேணும்னா நான் தங்கியிருக்கும் ஆசிரமத்துக்கு வாங்களேன்....”
“அதுக்குள்ள நீங்க ஏதும் செய்துக்க மாட்டிங்களே.?”
“ச்சே..ச்சே.. முகவரி கொடுக்கறேன் எடுத்துக்கோங்க...”
தேவி சொன்ன முகவரியைக் குறித்துக் கொண்டேன்.
“நாளைக்கு வரட்டுமா..?” என கேட்டதற்கு, சற்றே தயங்கி
“ம்.. நாளைகேவா.. வேற நாள் முடியுமா..?”
என கேட்டு கடைசியில் நாளைய சந்திப்பிற்கு பச்சைக் கொடி காட்டினான்.
“மணி நீங்க வந்தது நான் நெறைய பேசனும். ஏன்னு தெரியலை உங்ககிட்ட சொன்னா மனசுக்கு நிம்மதி கிடைக்கும்னு தோணுது அதான்.. தப்பா எடுத்துக்காதிங்க.. நான் தப்பான பொண்ணு கிடையாது..!”
அவள் அழத் தொடங்கினாள். இப்படி இரவில் பெண்களோடு பேசுவது எனக்கு ஒன்றும் புதிதல்ல.. என் காதலிக்குத் தெரியாத வரை இது எனக்கு பிரச்சனையுமில்லை.
“தேவி. நான் அப்படி நிணைக்கலை, கவலைப்படாதிங்க. உங்கள் பிரச்சனைக்கு என்னால தீர்வு கிடைக்கும்னு நீங்க நம்பறீங்க. உங்கள் நம்பிக்கை உங்களுக்கு நல்லதையே செய்யும். நிம்மதியா இருங்க நாளைக்குச் சந்திப்போம்.”
இவ்வாறு பேசி முடிக்கவும், என் அத்தை மகன் படம் பார்த்துவிட்டு படுக்க என் அறைக்கு வரவும் சரியாக இருந்தது.
“என்ன மாமா.. இப்போல்லாம் ராத்திரி அடிக்கடி ஏதோ பொண்ணுகிட்ட பேசறிங்க.. இதெல்லாம் நல்லாயில்லை..”
“ஏன் ரவி..?”
“இல்ல..! எனக்கும் ஒரு நம்பரைக் கொடுத்தா நாங்களும் பேசுவோல..”
“அடப்பாவி .. அதான் மாமான்னு கூப்டியா..?”
“அப்புறம் என்ன மாமா.... நீங்க. பொண்ணுங்களைப் பார்த்தோமா.. பேசினோமா... அப்பறம்... மு....”
“போதும்.போதும். அடுத்து நீ என்ன சொல்லப் போறன்னுத் தெரியும் படுத்துத் தூங்குடா...”
................................................................................................................
அதிக சிரம்மில்லாமல் தேவியின் வீட்டை அடைந்தேன், இல்லை... இல்லை... ஆசிரமம்தான் ஆனால் பார்ப்பதற்கு வீடு போல் இருந்தது. இப்பொ பல இடங்களில் வீட்டை வாங்கி சில பிள்ளைகளை வைத்து இது ஆசிரமம்னு சொல்லி வசூலிக்கும் கூட்டம் பெருகி வருவதுதான் என நினைவுக்கு வந்தது.
ஆசிரமத்தின் வெளியே நின்றேன்.
“தேவி” என அழைத்தேன்.
“பரவாயில்லையே , சொன்ன மாதிரி வந்துட்டிங்களே..?”
தேவியின் குரல்தான் அது. என் பின்னால் இருந்து கேட்டது.
“வாங்க வாங்க என்னங்க உள்ளே இருந்து வருவிங்கன்னு பார்த்தா என் பின்னால இருந்து வரிங்க...! ”
அவள் சிரித்தாள். அன்று நான் பார்த்ததைக் காட்டிலும் இன்று அவள் முகம் இருளடைந்துக் காணப்பட்டது.
அவள்,
“கொஞ்சம் வெளியே போயிருந்தேன். நல்லவேளை சீக்கிரமா வந்துட்டேன்... வாங்களேன்... நடந்துகிட்டே பேசலாம்... ”
நடக்கத் தொடங்கினோம், பல நாட்கள் பழகியவள் போல் அவளது அந்தரங்க விசியங்களைப் பகிர்ந்துக் கொள்ளத் தொடங்கினாள்.
“ஏன்னுத் தெரியலை மணி..! உங்ககிட்ட என் சோகத்தை சொன்னாக்கா... எனக்கு ஆறுதல் கிடைக்கும்னு தோணுது, அதான் சொல்றேன்.. நான் உயிருக்கு உயிரா காதலிச்சவன் என்னை ஆபாசமா படமெடுத்து எனையே பயமுறுத்தினான். எனக்கு வேற வழி தெரியலை..அதான் தற்கொலைக்குத் தயாரானேன்..ம்... ஆனா அது முடியலை.... இப்போ இந்த ஆசிரமத்தில் இருக்கேன் .அதும் எவ்வளவு நாள்னு தெரியலை..”
பேசிக்கொண்டே வந்தவள் திடிரென அமைதியானாள். நடந்துக் கொண்டே அவளுக்கு ஆறுதலாகப் பேச ஆரம்பித்தேன்.
“தேவி, இப்போ இந்த மாதிரி ரொம்ப நடக்குது. காதலிக்கறதா சொல்லி பொண்ணுங்களை இப்படி படமெடுத்து அந்த பொண்ணுங்க வாழ்கையையே நாசமாக்கிடறாங்க.. அவங்களை..” நான் முடிப்பதற்குள்,
ஆவேசமாக,
“கொல்லனும்... கொல்லனும்... நிச்சயம் கொல்லனும்..”
தேவியின் குரல் மட்டும் கேட்கின்றது. இதுவரை என்னுடன் நடந்து வந்தவளைக் காணவில்லை. ஆம் சுற்றிலும் தேடிவிட்டேன். அவளைக் காணவில்லை.
இது எப்படி சாத்தியம்...!
என் கழுத்தில் இருக்கும் முருகனின் படத்தைப் பிடித்தவாறே மீண்டும் ஆசிரமத்தின் வாசலில் நிற்கின்றேன்..ஒருவர் உள்ளிருந்து வந்து,
“அப்படி யாரும் இங்க இல்லைங்க தம்பி. இங்க சின்ன பிள்ளைங்கதான் இருக்காங்க..” என் பயத்திற்கு அணைவெட்டினார். பயம் என் உடலில் பரவி வியர்க்க ஆரம்பித்தது.
ஆமாம்...ஆமாம்... ஒரு முறை அத்தை மகன் ரவியின் கைபேசியில் ஏதோ ஒரு பெண்ணின் நிர்வாணப்படம் இருந்தது. அது..அது.. தேவியின் முகம்தான். அன்று இளம் பெண்ணின் தற்கொலை என வந்த படமும் இவளுடையதுதான். அப்படியென்றால் ரவிதான்.....!
குழப்பத்துடன் வீடு திரும்பினேன். இரவு மணி பனிரெண்டை நெருங்கிக் கொண்டிருக்க, அத்தை புலம்பினார்,
“என்ன புள்ளியோ எப்பப் பார்த்தாலும்... விடிஞ்ச பிறகுதான் வீட்டுக்கே வரான்..என்னதான் செய்யறதோ தெரியலை..”
ரவி இன்னும் வீடு திரும்பவில்லை. தொலைபேசியில் தொடர்பு கொண்டும் கிடைக்கவில்லை. காலையில் நடந்த எல்லாம் என் சிந்தனையைக் கட்டிப்போட்டது.
நள்ளிரவு மணி 12.00. தூக்கிவாரிப்போட்டது எனக்கு... என் கட்டிலுக்குப் பக்கத்தில் ரவியின் கைபேசி அலறியது. முன்பு நான் பல முறை முயற்சித்தும் தொடர்பு ஏற்படாத அதே கைபேசி.
அலறிக் கொண்டிருக்கும் கைபேசியில், அழைப்பவரின் பெயர, ‘ பிரைவட் நம்பர் ’ என இருந்தது..!
.........தயாஜி.........

யதார்த்தமான விடயங்கள் இருக்கிறது. நன்று. ஆனால் பேய்தான்.........
பதிலளிநீக்குபேயும் எதார்த்தங்களில் ஒன்றுதான்.....
பதிலளிநீக்குதொடர்ந்து வாங்களேன்....