Pages - Menu

Pages

மார்ச் 10, 2010

நாங்களும்தான்.....

வாலு பசங்க........

மணி... எங்க... நம்ம சொன்ன நேரத்துக்கு வந்துட்டோம் மத்த ரெண்டு பேரும் இன்னும் வரக்காணோம்...?”
என ஆந்தன் கடிகாரத்தைப் பார்க்க,
“அங்க பாரு வராங்க... இதுக்குத்தான் ஓடாத கடிகாரத்தை கட்டாதேன்னு சொல்றோம். கேட்கமாட்ற...”
என்றவாரே கேலியாய் சிரித்தான் மணி. இருவரின் பார்வைக்கும் அந்த மூன்று பேரும் தெரிந்தார்கள். அவர்கள் வருவதற்குள், அவர்கள் அனைவரையும் பற்றிக் கொஞ்சம் தெரிந்துக் கொள்ளலாம்.

மணி. இவர் எழுத்தாளர் சுஜாதாவின் தீவிர ரசிகன். எங்கு சென்றாலும் கையில் ஒரு புத்தகம் நிச்சயம் இடம் பெறும். படிகப்பதற்கா என்பது அவரைத்தான் கேட்கவேண்டும்.
“பள்ளிப் பாட புத்தகங்களை, ஒருவேளை சுஜாதா எழுதியிருந்தால் இவனது படிப்பிற்கு நிகர் கண்ணாடிதான்.”
என இவனை விட்டுக்கொடுக்காமல் பேசுபவள் ஒருத்திதான். அவள் தேவி. அவளுக்கு, நமது கதையில் இடமில்லாததால், அவளைப் பற்றி வேறு கதையில் சொல்கின்றேனே..

அடுத்தவரை அறிமுகம் செய்ய, அவரது குடும்பத்தில் நடக்கும் ஒரு சம்பவத்தை சொல்கின்றேன்.
“ஆனந்து என்னடா செய்யற..? உன்னால குளிக்கும் போதாவது பாடாம குளிக்க முடியாதா...”
என்பதுதான் ஆனந்தன் அன்றாடம் வாங்கும் அர்ச்சனை. இப்போது இவரைப் பற்றி தெரிந்திருக்கும். பாடுவதாகச் சொல்லி அனைவரையும் கொஞ்சம் படுத்துவது இந்த வளரும் பாடகனின் தலையாயக் கடமை.
மணி, ஆனந்தன் பற்றி தெரிந்துக் கொண்டோம். மேலும் இருக்கும் இருவரை சொல்லத்தான் ஆசை அதற்குள் அவர்கள் கூட்டணி அமைத்துவிட்டார்கள். ஆதாலால் கதையோடு வாருங்கள் தானாகவே தெரிந்துக்கொள்ளலாம்.

மணியும் ஆனந்தனும் ஒருசேர,
“வாங்க...சூர்யா” என அழைக்கவும்,
“எது சூர்யாவா..??? இவரா..என்ன கொடுமை சார் இது”
இப்படி சொன்னவர் சூர்யா என தன்னை அழைக்க விரும்பிய தேவாவுடன் வந்துக்கொண்டிருக்கும் குமார்.
“உனக்கு ஏண்டா பொறாமை.. நான் என்ன, உன்னை போல தத்துவமா சொல்றேன்.. ஏதோ என் முகம் அப்படி இருக்குன்னு எல்லாம் கூப்டறங்க... ”

ஆனந்தன்,
“உன் முகமா..? போனமாசம் தனுஷ்னு சோன்னியே,,”
“அதுவா..எப்போ எந்த படம் வருதோ அப்போ இவர்தான் கதாநாயகன்..”
என மணி தொடர்ந்தான்.
“சரி, சரி, விடுங்க.. எதுக்கு நாம இங்க வந்திருக்கோம்னு சொல்றிங்கலா..?”
“என்ன சூர்யா, அடுத்த படத்துக்கு போகனுமா...ஜோடி யாரு நமிதாவா”
“இல்லைடா.. பரவை முணியம்மா..!!”
எல்லாரும் சிரிக்க,
“தோ.. பாரு மணி, ஆனந்தா.. என்னா சிரிப்பு உங்களுக்கு, பாக்கத்தானேப் போறிங்க நானும் நடிகனாகி தமன்னாக் கூட நடிக்கலை...”
உடனே குமார்,
“விடு சூர்யா...உன் அருமை தெரியலை நம்ம பசங்களுக்கு, ஆமா தமன்னான்னு சொன்னியே, யாரு உங்க பக்கத்துவீடா..?”
“டெய் நீயுமா...”
மீண்டும் சிரிக்கத் தொடங்கினர்.
விட்டால் இவர்கள் இப்படித்தான் தங்களுக்குள் கிண்டலும் கேளியும் செய்வார்கள். ஆனால் இதில் ஒவ்வொரு முறையும் பாதிபக்கப்படுவது என்னவோ தேவாதான். இருக்காதா, எத்தனை நடிகர்கள் நம்மை படுத்துகின்றார்கள். விடுங்கள் அனுபவிக்கட்டும்.
அப்புறம் நடிகனாகியப் பின் நம்ம என்ன இயக்குநர்கள் சொல்வதையே கேட்கப்போறதில்லை.அது வேற கதை..!.
இவர்களின் இன்றையக் கூட்டணிக்கு ஒரு காரணம் உண்டு. அதில் அபாயமும் உண்டு. இவர்களைப் பொருத்தவரை. ஊருக்கு அடங்காதவர்கள்,வீட்டிற்கும்தான். ஏதாவது செய்து தங்களுக்கு தாங்களே புகழ் சேர்க்க வேண்டியக் கட்டாயத்தில் இருக்கின்றார்கள்.
(இவர்களுக்கு இவர்களே புகழ் தேடினால்தான் உண்டு..!)
“கண்ணா புகழ் பொருள் பொண்ணு இதெல்லாம் நம்மைத் தேடிவரனும் நாம தேடிப்போகக் கூடாது..”
என வழக்கமாக தத்துவம் சொல்லிய குமாருக்கு மற்றவர்கள் பதிலாகக் கொடுத்த முறைப்பு மேலும் பேச விடாமல் தடுத்தது. எதையெதையோ பேசிக் கொண்டிருந்தவர்கள் கடைசியில் முடிவுக்கு வந்தார்கள். பெரிதாக ஒன்றும் முடிவு எடுக்கவில்லை. இங்கிருந்து அந்த காட்டுப் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டிற்கு சென்று வருவதுதான்.இதுதான் முடிவா என நினைக்கின்றவர்கள், அந்த வீட்டைப்பற்றி கண்டிப்பாகத் தெரிந்துக் கொள்ளவேண்டும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, இங்கு ஒருவர் தூக்கில் தொங்கினாராம்.
(ஆளுக்காள் இப்படித்தான் சொல்றங்க, விசாரிச்சா யாருக்கும் முழுசா சொல்லத் தெரியலை.இது நமக்கு தெரிஞ்ச கதைதானே....!!!)
அன்று முதல் இன்று வரை இந்த காட்டு வழியாக யாரும் வருவதில்லை.
எப்படியாவது அந்த வீட்டிற்குச் சென்று தாங்கள் வீரர்கள் என எல்லாரும் புகழவேண்டும் என திட்டம் தீட்டப்பட்டு, நாள் குறிப்பிடப்பட்டது.மணி, ஆனந்தன், குமார் இவர்கள் மூவறும் குறிப்பிட்ட நாளில் தயாராகினார்கள்.
என்ன அந்த வருங்கால நடிகனைக் காணவில்லைனு பாக்கறிங்கலா..? அவருக்கு ஏதோ வேலையாம்.பயம்னு தப்பா எடுத்துக்காதிங்க என்ன..!

மூவறும் சொன்னார் போலவே ஒன்றுகூடினார்கள்.
அவரவர் கொண்டுவந்திருந்த பொருட்களை சரி பார்த்தனர்.

“என்ன மணி இங்கயுமா நீ சுஜாதா புத்தகத்தோடு வரனும். உன்னோட படிப்பு ஆர்வத்துக்கு அளவே இல்லையா..?”
“குமார்.இது ஒன்னும் தலைவர் புத்தகம் இல்லையாம். அங்க நடக்கிறதை குறிப்பு எடுத்து வைச்சிக்க கொண்டுவந்திருக்கும் புத்தகம் அவ்வளவுதான்.எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசறதுக்கு குமாரு.. உன்னாலதான் முடியும், சரி நீ என்ன கொண்டுவந்தே..?”

“”ஒரு போத்தக் பெட்ரோலும் , தீப்பட்டியும் அப்பறம் கொஞ்சம் பழைய பேப்பரும்..”
“அதை வச்சி என்ன அந்த வீட்டில் இருக்கும் பேயை இங்லிஸ் படத்துல வர பேய் மாதிரி எறிக்கப் போறியா..? பார்த்துடா இது தமிழ் பேய் வேப்பிலைக்குதான் பயப்படும்..”
மணி சிரிக்கத் தொடங்கினான்.குமார் கோவமாக பேச ஆரம்பிக்கும் முன்பு, ஆனந்தன் தன் ஆயுதத்தை எடுத்தான்.

“இப்படி ஆளுக்கு ஆள் சண்டை போட்டிங்கனா , அப்பறம் நான் பாட ஆரம்பிச்சிடுவேன்..”
மணி, ஆனந்தன் ,
“அயயோ வேண்டாம் ராசா நாங்க சண்டைப் போடலை போதுமா. கிளம்பு போகலாம்.”


...........................................................................................

இன்னும் இரவாகவில்லை, அதற்குள் ஆள் நடமாற்றம் அற்ற அந்த வீட்டுக்கு கொஞ்ச தூரத்தில் மூவறும் வந்து சேர்ந்தனர். இந்த மூவறைத் தவிர இன்னொரு உருவம் இவர்களை கவினிப்பது இவர்களுக்குத் தெரியும்வரை ,யாரும் பயம் கொள்ளப்போவதில்லை.

“மணி என்னத்தைடா இப்படி அவசர அவசரமா எழுதற..”
பயப்படமால்தான் கேட்டான் ஆனந்தன்.
“அதுவா அங்க பாரு நமக்கு முன்னமே குமார் தைரியமா போறானே
அதைதான் குறிச்சி வைக்கிறேன்..”
“என்னடா சொல்ற”
“எப்படியும் முன்னுக்கு போய் அந்த பயந்தாங்கோழி பயந்து அழப்போகுது அதான்”
“மணி முன்னுக்கு போனது குமார்னா உன் பின்னாடி இருக்கிறது யாரு..?”
“யாரு..?”
“யாரா..? நீ சொன்ன பயந்தாங்கோழி”
“என்னது..!!!”

மூவறுக்கும் மிக அருகிள் ஏதோ சலசலப்பு. மூவறும் ஒருவர்போல ஒட்டிக்கொண்டு சலசலப்பு வந்த திசையை நோக்கினர். ஒரு கருத்த உருவம். இவர்கள் இருப்பதைக் கவனிக்காது நடந்து சென்றது. அந்த உருவத்திற்கு கால் இருக்கின்றதா இல்லையா என்பதை இவர்களுக்கு கவைக்க தோனவில்லை ஏனென்றால் தலையே இல்லையே!!!!!

.....................................................................................................

அந்த உருவம் நேரே அந்த வீட்டிற்குச் சென்றது. என்ன ஆச்சர்யம் கதவை ஊடுரிவி செல்ல வேண்டிய உருவம் தன் தலைமேல் போத்தியிருந்த கோணிப் பையிலிருந்து சாவி ஒன்றை எடுத்து கதவைத் திறந்தது. நமது வாலு பசங்களும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு அந்த வீட்டில் நடப்பதை சற்று அருகில் சென்று கவனித்தனர்.
ஒற்றை உருவம் என இதுவரை தெரிந்தது இப்போது நான்கு உருவங்களாகத் தெரிந்தது. அதில் ஒரு உருவம் இலையில்லை அழகிய பெண் ஒருத்தி கட்டப்பட்டிருந்தாள்.
மற்ற மூவரில் ஒருவன் யாருடனோ மிரட்டல் கலந்தத் தோரணையில் பேசிக் கொண்டிருத்தார்கள். மற்றவர்கள் அவனுக்கு ஏதேதோ ஜாடை காட்டினர். சட்டென்று ஒருவனைக்காணவில்லை. எப்படி தெரிவான், அவன் தான் வெளியே இவர்ளுக்குப் பின்னால் வந்து நிற்கின்றானே..

...............................................................................................


நாற்காலிக்கு அருகில் இப்போது மணி, ஆனந்தன். குமார் என வாலு பசங்களும் கை கட்டப்பட்ட நிலையில் இருந்தனர்.
இவர்களையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவன் தன் சக நண்பனிடம்.
“இத பாரு ஆவி, பேய்னு எல்லாரையும் பயப்படுத்தினோம். இப்போ இந்த பசங்க வந்திருக்காங்கன்னா என்னா அர்த்தம்..?”
“பயம் கொஞ்சம் கொஞ்சமா குறையுதுன்னு அர்த்தம். இப்பவும் ஒன்னும் கெட்டுப்போகலை.. இவனுங்க மூனுபேரையும் கழுத்துல கயிறு கட்டி மரத்துல தொங்கவிட்டுடுவோம்..
“தொங்க விட்டுட்டா..?”
“என்ன புரியாத மாதிரி பேசறிங்க.. அப்படி இவனுங்களை தொங்கவிட்டுட்டா.. எலாரும் என்ன தெரியுமா சொல்லுவாங்க... ஆவி வீட்டுக்கு வந்தாங்க அதான் ஆவி பலிவாங்கிடுச்சின்னு சொல்லி இனி இந்த பக்கமே யாரும் வரமாட்டாங்க..”
“சரியா சொன்ன..”
நடக்கப்போகும் விபரீதத்தை, யூகிக்கமுடியாமல் மணி
“அண்ணே அப்படி செய்யாதிங்கண்ணா.. இன்னும் சுஜாதா புத்தகம் படிக்காம நெறைய இருக்கு..”
“நான் மட்டும் என்னவாம் . அண்ணா பெரியா பாடகனை இழந்துடாதிங்கண்ணே...”
“அண்ணே எப்படியும் சாகப்போறோம். அதுக்குள்ள இந்த நாற்காலியில இருக்கற பொண்ணு யாருன்னு சொன்னா நிம்மதியா சாவோம்..”

சட்டென்று மூவரின் முகமும் மாறியது.அதில் ஒருவன்,
“என்னடா விளையாடறிங்கலா.. உங்களைத் தவிர இங்க யாரு இருக்கா..?”
‘டுமீல்’
துப்பாக்கி சூடு.
வெளியில் இருந்து ஒரு குரல்.
“நாங்க உங்களைச் சுத்தி வளச்சிருக்கோம்.அந்த பசங்களுக்கு எதும் ஆககுடாது.”

..............................................................................................

அந்த வீட்டில் இருந்து போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.அந்த மூன்று நபர்களும் கைது செய்யப்பட்டனர். மணி, குமார், ஆனந்த ,
“சூர்யா எப்படிடா நீ அந்த இடத்துக்கு போலிசோட வந்தே..”
“ம்............ எத்தனைத் தமிழ் படம் பார்த்திருக்கோம்.இதை கூடவா கத்திருக்க மாட்டோம்”

குமார் தான் கொண்டு சென்ற பழைய நாளிதழ்களை எடுத்து மறுபடியும் மடித்துக் கொண்டிருக்கும்போது ஒரு புகைப்படத்தை கவனித்தான்.உடனே அந்த பக்கத்தை ஆனந்தனிடம் காட்டி ,
“ஆனந்தா இந்த பொண்ணைதானே நாம அங்க நாற்காலியில் பார்த்தோம். இந்த பொண்ணுக்கு கருமகிரியைன்னு வந்திருக்கு..”
ஆனந்தன், குமார் இவர்கள் இருவரைக் காட்டிலும் அதிகம் அதிர்ச்சிக்குள்ளானவன் சூர்யாதான்,

“என்னடா சொல்றிங்க.. இந்த பொண்ணுதாண்டா என்கிட்ட வந்து நீங்க அனுப்பினதா சொல்லி நீங்க ஆபத்துல இருக்கிங்கன்னு என்னையும் போலிசையும் அந்த வீட்டுக்குக் கூட்டிவந்திச்சி ......இந்த பொண்ணு இது..இது .. செத்துப்பொனப்பொண்ணா..எப்படிடா..?”

இவ்வாரு இவர்கள் தங்களுக்குள்ளாகவே கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருக்க மணி மட்டும் வேறு எங்கோ பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தான்.
மணி பார்த்த இடத்தில் அந்த பெண் நின்று சிரித்துக் கொண்டிருந்தாள்.....





தயாஜி வெள்ளைரோஜா

4 கருத்துகள்:

  1. தயாஜி... வாழ்த்துகள். உங்களின் எழுத்து நடை மிகவும் அருமையாக உள்ளது. என்னடா கதை இது என எண்ணத் தோணாமல். உங்கள் கதைகளை வாசிக்கத் தொடங்கி விட்டால் இக்கதை கடைசி வரை படிக்க உங்களின் எழுத்து நடை ஊக்குவிக்கிறது. வாழ்க தயாஜி... வளர்க உம் எழுத்துப்பணி என இறைவனை பிராத்திக்கும் அன்பு அக்கா...

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துக்கள் நண்பரே, எப்பொழுதும் போலவே உங்கள் கதை மிகவும் அருமை, படித்து முடிப்பதற்குள் வேறு எதையும் செய்ய முடியவில்லை(வேலை நேரத்தில் திருட்டு தனமாக படிப்பதால்).சுஜாதா அவர்களின் எழுத்து சாயலை உங்கள் எழுத்துகளில் காண முடிகிறது... நன்று, வாழ்க வளமுடன்...

    பதிலளிநீக்கு