வேலை நிமித்தமாக..
கோலாலும்பூர் வந்திருந்தாலும்,
தீபாவளியன்று......
என் பிறந்தகத்தைப் பார்க்கவேண்டிய
பயணத்திற்கு 'டிக்கெட்' வாங்கியிருந்தேன்...
"ஆறுமுகம் பிள்ளைத் தோட்டம்"
என்றும்,
"யு.பி தோட்டம்"
என்றும்,
இருத்ரப்பினர புரிந்து வைத்திருந்தாலும்......
என் மனதில் தங்கியிருக்கும் பெயர்
"யு.பி தோட்டம்"
அங்குதான் என் தாயின் கர்ப்பப்பையில்,
எனக்கென்ற இடத்தை
ஓடிப் பிடித்திருந்தேன்....!
மாதம் இரண்டாம் ஞாயிறு,
எல்லோர் வீட்டிலும் நிச்சயம்....
கோழிக்கறி.....
அதற்கெனவே.....
இரு வியாபாரிகள்
கொஞ்சம் 'சீக்கு' பிடித்தக்
கோழிகளை விறக வருவர்...
மாதத்தின் கடைசி வாரங்களில்,
கூட்டு, பருப்பு, ரசம், தன்ணீர்
என வரிசையாக காத்திருக்கும்
எங்கள்ம் வயிற்றுப்பசியைப் போக்க........
நான் படித்த பள்ளிக்கு பெயர்,
'லாடாங் பெர்படானான் தமிழ்ப் பள்ளி'
இன்று பலரின் முயற்சியால்
சிறப்பாக வளர்ச்சிப் பெற்றுள்ளது.....
குடிகாரத் தகப்பன்களாலும்...
ஓடிப்போன சில மனைவியர்களாலும்..
என் நண்பர்கள்,
வளர்ச்சி எனற
கோட்டையை அடையும் முன்னரே....!
முதிர்ச்சி எனும் பாதாளத்தில்
விழுந்திருந்தனர்....!
இந்த தீபாவளிக்கு,
நான் வருவது அவர்களுக்குத்
தெரியாது...
அப்படித் தெரிந்திருந்தால்....?
அந்த ஒரு நாள்
எனக்காக்.....
பணக்காரர்களாக வாழ்ந்து,
அடுத்த் தீபாவளிவரை
வட்டிக் கட்டிக்கொண்டிருப்பர்...........
பக்கத்தில் இருக்கும்
பால்மரக்காட்டில்...........
'பேய்கதை' எழுதச் சென்றோம்...
நானும் அப்போதைய என் 'வாசக' நண்பனும்,
அங்கு அட்டைக் கடித்ததையும்
நாய்கள் துரத்தியதையும்
எப்படி எழுத முடியும்....?
என அந்த பேய்க்கதைக்கு
முற்றுப்புள்ளி வைத்தோம்
விடுமுறைக் காலங்களில்
பெற்றோருக்குத் தெரியாது
குட்டையில் குளித்து......
சிகரெட்டில் வகை வகையாய்
புகைவண்டி விட்டு.......!!??
கையில் கிடைக்கும் பொருட்களைக்கொண்டு,
சமைத்த பொழுது
எங்களுள் இருந்த எதிர்ப்பார்ப்பு
ஒன்றுதான்.............!
இந்த குட்டையில்
"தண்ணீர் எப்பதான் சுத்தமா வரும்....?"
சில வயதுவரை.........
நான் காலணியோ-சிலிப்பரோபோட்டு
ரோடில் நடந்ததில்லை...?
அதனாலெயே எனக்கும் ..
ஆணிகளுக்கும் எனக்கும்,
ஒரு தொடர்பு உண்டு.......
இந்த தீபாவளிக்கு அப்படி செய்யவோ....?
சீ............சீ.........
இப்போ நான் பெரியப் பையன்....!
முன்பின் அறிமுகம் தெரியாதோர்
இல்லம் நாடினால்கூட.......
தீபாவளி உபசரிப்பும்
தீபாவளி பணமும் உறுதி...........
ஒரு தீபாவளியில் மழை வந்தும்....
பட்டாசு வெடித்தேன்
என் தாயும் வெடித்தாள்......
அறையில் பட்டாசு வெடிக்காக் கூடாதென்று.........
பூண்டு பட்டாசுக்கு மட்டும்,
பஞ்சம் இல்லை
அப்பாவுக்குப் பிள்ளிகளின் பாதுகாப்பு முக்கியம்.......
எனக்குத் தெரிந்த சில 'அப்பாக்களே'
இங்கு பாதுகாப்பாக இருக்கவில்லை.....!!
அப்போ நான் பார்த்த பெரிசுகள் இப்போது இருக்காது.....
அதுமட்டுமா...?
சில சிறுசுகளையும் என்னால்
பார்க்க முடியாதுபோலும்.....
அங்குதான் பல
திருவிழாக்கள் நடந்தனவே......!!!
பலிகொடுக்கும் விழாக்கள்மாறி......!
இன்று பலியாக்கும் விழாக்களாகியுள்ளதே........?!
தீபவளி என்றாலும்
என் சிந்தனையில்
என் தோட்டம்தான்.........!?
இப்போதுதான் தோன்றுகின்றது...
என் தோட்டம்
'துண்டாட்டப்பட்டுவிட்டது'
அங்கு இன்று வெறும் மண்ணோடு....
பாதி கட்டிய நிலைகளில்...!
கடைகளும்,
சில நல்லவர்களின் இல்லங்களும்.....
இருந்தும் நான் செல்வேன்
என் பிறந்த மண்ணில்தான்
என் தீபாவளி.............
என் கால்கள் ஏக்கம் கொள்கின்றது
எனது 'யு.பி தோட்ட மண்ணை மி(ம)திக்க.....
எனது பிறந்தகமான
'யு.பி' தோட்டத்திற்கு
இனிய தீபவளி வாழ்த்துகள் தாயே.....!
.............தயாஜி வெள்ளைரோஜா.............
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக