“எனக்கு எங்க அப்பாவைதான் ரொம்ப பிடிக்கும். எப்போதும் அறிவுரை சொல்லிக்கிட்டு இதை செய்யாதே, அதை செய்யாதேன்னு,சொல்ற அம்மாவைப் பார்த்தாலே எரிச்சல்தான் வரும்..........
அனா,இப்பதான் அம்மா சொன்னது என் நன்மைக்குன்னு புரியுது..!”
“அப்போ அப்பாவை சுற்றி எப்பவும் சிலர் இருப்பாங்க. அப்பாதான் ‘தலை’
அவர் பேச்சைதான் எல்லோரும் கேட்பாங்க.... அப்பா யாருக்கும் பயப்பட மாட்டாரு போலிசைத் தவற.... ஏன்னு தெரியாது..!”
“எனக்கும் அப்பா மாதிரி ஆகனும்னு தோனிச்சி..... அம்மாதான் படி படின்னு கஷ்டபடுத்துவாங்க....அப்போ நான் அதை உணரலை..!
அப்பாவைப்போலவே நடந்தேன், பேசினேன் அவருக்கு சிலர் வாங்கிகொடுத்த சிகரெட்டை யாருக்கும் தெரியாம குடிச்சேன்... அம்மா கண்டுபிடிச்சி திட்டினாங்க ஆனா அப்பா தெரியாதாமாதிரி இருந்தாரு.”
“எனக்கு எது சரின்னுப்படுதோ அதை செய்ய ஆரம்பிச்சேன்..! எல்லாரும் பயப்பட்டாங்க....இப்போ யாரும் திரும்பிக்கூட பார்க்கமாட்ராங்க.....!”
“தப்பு என்மேலதான்”
என தன் சொந்தக் காதையை சொல்லிமுடித்ததும் அந்த
இளைஞன் தட்டித்தடுமாறி எழுந்து நடக்கத்தொடங்கினான் தன் ஒற்றைக்காலோடு........
கஷ்டமாகத்தான் இருந்தது.காலம் கடந்துவிட்டதே..!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக