Pages - Menu

Pages

ஜனவரி 29, 2011

புத்தகத்தரிசனம்.....


22-1-2011பணி நிமித்தமாக ஜொகூர் மாநிலம் சென்றிருந்தோம். நண்பர்கள் துணிக்கடைக்கு சென்றிருந்தார்கள். துணிக்கடைப் பெண்ணை கிண்டல் செய்யும் போது;எதார்த்தமாகவும் ஏதோ நம்பிக்கையுன் அடிப்படையிலும் இங்கு புத்தகங்கள் இருக்கின்றனவா எனக்கேட்டேன்.அதிர்ஸ்டவசமாக எனக்கு சாதகமான பதில் கிடைத்தது கடையின் மறுபகுதிக்கு என்னை அழைத்துச் சென்ற அந்த பெண் இருட்டாய் இருந்த இடத்தை காட்டி விளக்கைத் திறந்தாள். இனி நான் பார்ப்பதாகக் கூறி அந்த பெண்ணை அனுப்பிவிட்டேன் ஆடைகள் வாங்கும் நண்பர்களுக்காக.... தூசிகளுக்கு இடையில் பலவகை பழைய புத்தகங்கள் கண்ணில் கதகதப்பை ஏற்படுத்தியது.


1. பாறைச் சூறாவளித் துறைமுகம்.

- சேவியத் எழுத்தாளர்கள் அறிவியல் புனைகதைகள்.

- மொழிபெயர்ப்பாளர்

- பூ.சோமசுந்தரம்.

- மொத்தம் 266 பக்கங்கள் கொண்ட புத்தகம்

- 7 சேவியத் எழுத்ததளர்களின் புனைகதைகள் கொண்ட புத்தகம்.


2. லியோ டால்ஸ்டாய் கதைகள்.

- மொழிபெயர்ப்பாளர் - நாஞ்சில் ஸ்ரீ விஷ்ணு

- ரஷ்ய நாட்டு மாமேதை லியோ டால்ஸ்டாய் எழுதிய சில கதைகளின் மொழிபெயர்ப்பு.

- மஹாத்மா காத்தியும் இவரின் சில கதைகளைமொழிபெயர்த்திருக்கின்றாராம்.


3. குஷ்வந்த் சிங் ஜோக்ஸ்.

- புகழ்பெற்ற குஷ்வந்த் சிங்-கின் நகைச்சுவைத் துணுக்குகள்.


4. கவிஞர் கண்ணதாசன் திரைப்படப் பாடல்களில் இலக்கியம்.

- க. சுப்பிரமணியம் M.A எழுதியிருக்கின்றார்-

சங்க இலக்கியம்;பிற இலக்கியம்; திருக்குறள்கருத்துகள் ஆகியவற்றிலிருந்து கண்ணதாசன் எவ்வாறு எப்படி தன் பாடல்களுக்கு பயன் படுத்தியுள்ளார் என எழுதப்பட்ட புத்தகம் இது.

புத்தகத்தரிசனம்....


தைப்பூசம் 2011-லில் பத்துமலை முருகன் தரிசனத்துக்கு பிறகு கிடைத்த புத்தகத்தரிசனம்.


1. கு.அழகிரிசாமி கதைகள்தொகுப்பாளர் -கி.ராஜநாராயணன்-


2.அசோகமித்திரன் படைப்புலகம்தொகுத்தவர்

-ஞாநி-


3.லா.ச.ராமாமிருதம் படைப்புலகம்தொகுத்தவர்

-அபி-


4.திரைக்கதை அமைத்து வசனம் எழுதும் முறைகளும் பயிற்சிகளும்எழுதியவர்

-பி.சி.கணேசன்-


5.பெண் வாசனைஎழுதியவர்

-ஆண்டாள் பிரியதர்ஷினி-


6.பெண்ணின் மறுபக்கம்எழுதியவர்

-டாக்டர் ஷாலினி -


7. அர்த்தமுள்ள அந்தரங்கம்எழுதியவர்

-டாக்டர் ஷாலினி -

ஜனவரி 05, 2011

கவிதையானவள் கவனத்திற்கு.....







உன்னொடு நானும்
என்னோடு நீயும்
பேசும்போது;

மண்ணோடு மக்களை
மறந்து;

வாயேன்.......
விண்ணோடு பறக்கலாம்......

கல் தடுக்கி விழவில்லை
GUN சுட்டும் துழையில்லை......

உன்;

கண்பட்டு விழுந்துவிட்டேன்....
இதயம் வழி துவாரங்களை
விழுங்கிவிட்டேன்.....

ஜீரணிக்கும் ஆசையில்
ஜீன்களெல்லாம் போராட.....

வீண்வம்பில் மாட்டியதாய்
என் மார்பும் பதைபதைக்க....

ஏனோ தெரியாது
என்னவள்;

நீதான் என்ற
எண்ணம் மட்டும்....
என்னுள் சுரக்கிறது....

நுரையீரலும்;
உன் பெயரையே
சுவாசிக்கிறது......

சொர்க்கம் நரகம்...
நம்பிக்கை விதைத்தேன்...

உந்தன் இருவகை
இதழ்பதிவில்....

என் உயரத்தையும் உருக்குவது
உந்தன் உயர்த்திய புருவம்.......

என் உதிரத்தையும் இறுக்குவது....
உன் இரண்டாவது ஆயுதம்....

முதல் ஆயுதம்
கண்ணும்;
மறு ஆயுதம் கண்ணீரும்....

கவிதை எழுதும் சுகம்
இரட்டிப்பாகின்றது;
கவிதையே உன்னை எழுதும் போது.........